பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
கடந்த இரண்டு வருடங்களிலேயே நடிகர் பஹத் பாசில் தெலுங்கில் நடித்த புஷ்பா, தமிழில் நடித்த விக்ரம், சமீபத்தில் வெளியான மாமன்னன் என இந்த மூன்று படங்களிலுமே வித்தியாசமான கதாபாத்திரங்களில், வித்தியாசமான தோற்றங்களில் நடித்து நாளுக்கு நாள் இன்னும் அதிகமான ரசிகர்களை பெற்று வருகிறார். குறிப்பாக சமீபத்தில் மாமன்னன் படத்தில் அவரது ரத்தினவேல் கதாபாத்திரம் இளைஞர்கள் மத்தியில் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் ஆவேசம் என்கிற படத்தில் நடித்து வருகிறார் பஹத் பாசில். இந்த படத்தில் ஒரு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் பஹத் பாசில் நடிக்கிறார். இந்த படத்திற்காகவும் தனது தோற்றத்தில் குறிப்பாக கிருதா மற்றும் மீசையில் வித்தியாசம் மாற்றம் செய்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் ஹாரர் காமெடி படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ரோமாஞ்சம் என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் ஜித்து மாதவன் இந்த படத்தை இயக்கி வருகிறார். பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியை கதைக்களமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது.