அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை | இந்த வார ரிலீஸ், யாருக்கு வரவேற்பு? | சமரசம் ஆனதும் வெளிவந்த 'தனுஷ் 52' அறிவிப்பு | மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் | ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' |
ஸ்ரீவிநாயகா பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகும் படம் "பாதகன்". ஆர்.சதீஷ் ராஜா நாயகனாக நடித்து தயாரிக்கும் இதில் அம்சரேகா, பிரியாஸ்ரீ, ராஜசேகர், கராத்தே ராஜா, குல்ஷன், முத்துக்காளை, போண்டாமணி, ராஜாராம், கே.வி. மணிகண்ணன் ஆகியோர் நடிக்கின்றனர். ரவிகிரண் இசையமைக்கிறார்.
படம் பற்றி ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் சி.தண்டபானி கூறும்போது, "இயற்கை வளங்களை கொள்ளை அடித்து தான் மட்டுமே வாழ்வதற்கான செயல்களை வில்லன் திட்டம் போட்டு செய்து வருகிறான். இதை கண்டுபிடித்த கதாநாயகனும் , கதாநாயகியும் ஊர்மக்களிடமும், காவல்துறையிடமும் எடுத்து சொல்ல முற்படுகின்றனர். இதனால் அவர்கள் இருவரும் வில்லனால் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். முடிவில் வில்லன் என்ன செய்தான் என்பதை மிகவும் திரில்லாகவும், மக்கள் அதிர்ச்சியோடு பார்க்கும் வகையிலும் இதில் சொல்லி இருக்கிறேன்" என்கிறார்.