ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள கிங் ஆப் கொத்தா என்கிற திரைப்படம் பான் இந்திய ரிலீஸ் ஆக நேற்று வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. இந்த படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் வில்லனாக சார்பட்டா பரம்பரை புகழ் டான்சிங் ரோஸ் சபீர் கல்லரக்கல், நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ், நடிகர் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபல மலையாள இயக்குனர் ஜோஷியின் மகன் அபிலாஷ் ஜோஷி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து சபீர் கல்லரக்கல் மற்றும் ஐஸ்வர்ய லட்சுமி இருவரும் ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்டனர்.
அப்போது சபீர் கல்லரக்கல் முதன் முதலாக துல்கர் சல்மானை சந்தித்தபோது தான் ஒரு நட்சத்திர நடிகர் என்றோ பெரிய குடும்பத்து வாரிசு என்றோ ஒரு துளி கூட காட்டிக் கொள்ளவில்லை. பார்த்த உடனேயே கதை பற்றி பேச ஆரம்பித்த அவர் இப்படி ஒரு வசனம் உங்களுக்கு இருக்கிறது சரியாக வருமா, நான் இப்படி பேச போகிறேன், இது உங்களுக்கு செட் ஆகுமா என ஒரு சக நடிகராகவே பேச ஆரம்பித்து விட்டார். முதல் நாளில் இருந்தே அவருடன் ஈசியாக என்னால் பயணிக்க முடிந்தது என்று கூறினார்.
நடிகை ஐஸ்வர்ய லட்சுமியும் துல்கர் சல்மானின் இந்த எளிமையை வியந்து பாராட்டியதுடன் பேசாமல் இனிமேல் அவருக்கு துல்கர் ஈஸி சல்மான் என பெயர் வைத்து விடலாம் என்று ஜாலியாக குறிப்பிட்டார்.