தமிழ்ப் படங்களுக்கு இணையாக வெளியான 'புஷ்பா 2' | 'மகாராஜ்' படத்தில் சர்ச்சை காட்சியில் நடித்தது ஏன்: ஷாலினி பாண்டே விளக்கம் | தனுஷ் ஒரு மிகச் சிறந்த மனிதர்! - சொல்கிறார் ரோபோ சங்கர் | 45வது படத்தில் வக்கீலாக நடிக்கும் சூர்யா! | டிச.,18ல் ஓடிடியில் வெளியாகும் ‛கேர்ள்ஸ் வில் பி கேர்ள்ஸ்' | இயக்குனர் கே. எஸ். ரவிக்குமாரின் தாயார் மரணம்! | விடாமுயற்சி டப்பிங் பணிகளை தொடங்கிய அஜித்குமார்! | ரஜினி பிறந்த நாளில் கீர்த்தி சுரேஷ் திருமணம்! | கூலி படத்தில் இணைந்த ரெபா மோனிகா ஜான், சந்தீப் கிஷன் | பாலிவுட்டில் அறிமுகமாகும் பஹத் பாசில் |
விதார்த் - ரம்யா நம்பீசன் முதன்மையான வேடத்தில் நடித்து வெளியான 'என்றாவது ஒருநாள்' திரைப்படத்தை இயக்கிய வெற்றி துரைசாமி, தற்போது புதிதாக பெயரிடப்படாத கிரைம் திரில்லர் திரைப்படத்தை இயக்கவுள்ளார். 2021 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் 'என்றாவது ஒரு நாள்'. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே உலக நாடுகளில் நடைபெற்ற பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு 40-க்கும் மேற்பட்ட விருதுகளை வென்று, திரை ஆர்வலர்களின் பாராட்டையும் பெற்றது.
இயக்குநர் வெற்றி துரைசாமி தற்போது இயக்கவுள்ள திரைப்படத்தில் அனேக பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெறும் எனவும், மேலும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் குறிப்பாக கிரைம் திரில்லர் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கும் வகையில் திரைக்கதை அமைந்திருப்பதாகவும், விரைவில் இப்படத்தின் நடிக நடிகையர், படக்குழு, டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் விவரங்கள் வெளியிடப்படும் எனவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.