பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி | ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா | 8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை: துல்கர் சல்மான் | கார்த்தி படத்தில் எம்ஜிஆர் பாடல் | இளையராஜாவுடன் சமரசம்: 'டியூட்' வழக்கு முடித்து வைப்பு | பிளாஷ்பேக்: ஆங்கில படத்தை தழுவிய பாலுமகேந்திரா | ஏவிஎம் சரவணன் மறைவு என் மனதை பாதிக்கிறது : ரஜினி | ஏவிஎம் சரவணனுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி | பிளாஷ்பேக்: 2 முறை படமான நல்ல தங்காள் கதை | ஏவிஎம் சரவணன் படத்தயாரிப்பை நிறுத்தியது ஏன்? |

கடந்த 2004ம் ஆண்டில் செல்வராகவன் இயக்கத்தில் காதலை மையப்படுத்தி வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் '7 ஜி ரெயின்போ காலனி'. இதில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
தற்போது 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தினை செல்வராகவன் இயக்கவுள்ளார். இதிலும் முதன்மைத் கதாபாத்திரத்தில் ரவி கிருஷ்ணா நடிக்கிறார். இந்த பாகத்திற்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
முதலில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க அதிதி ஷங்கர் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியானது. ஆனால், இப்போது இளம் மலையாள நடிகை அன்ஸ்வரா ராஜன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு தமிழில் ராங்கி என்கிற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதன் படப்பிடிப்பு செப்டம்பர் முதல் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.