மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

தமிழ் சினிமா இசையில் அதிகமான 100 மில்லியன் பாடல்களைக் கொடுத்த இசையமைப்பாளர் என்ற பெருமையைப் பெற்றவர் அனிருத். அவரது இசையில் வெளிவந்த முதல் படமான '3' படத்தில் இடம் பெற்ற 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் அவரை உலக அளவில் உள்ள பல இசை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தது.
அவரது இசையில் சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' படத்தின் பாடலான 'காவாலா' பாடலும் யு டியுபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து சூப்பர் ஹிட் ஆனது.. அப்பாடல் தற்போது ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டா வரை ரீச் ஆகியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பாலோயர்களைக் கொண்ட உகாண்டா நாட்டின் 'ஹைபர் கிட்ஸ் ஆப்ரிக்கா' என்ற சிறுவர், சிறுமியர் அடங்கிய நடனக் குழுவினர் 'காவாலா' பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளனர். அதை பிரபல ஸ்பெயின் நாட்டின் கால்பந்து கிளப் அணியான எப்சி பார்சிலோனா அவர்களது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளது.
தங்களது நடனத்தைப் பகிர்ந்த எப்சி பார்சிலோனா அணிக்கு அந்த நடனக் குழுவினர் “எங்களால் இதை நம்ப முடியவில்லை. உங்களை கடவுள் மேலும் ஆசீர்வாதிக்கட்டும், எங்களது கனவு நனவானது,” என்று நன்றி தெரிவித்துள்ளனர்.




