கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி | 2025 - வசூல் படங்களில் முதலிடத்தைப் பிடிக்குமா 'காந்தாரா சாப்டர் 1' ? | விஷால் - சுந்தர் சி கூட்டணி படத்தின் அறிவிப்பு… விரைவில்… | மனிஷாவுக்கு கை கொடுக்குமா 'மெஸன்ஜர்' |
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'ஜெயிலர்'. இப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் தமன்னா, சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், சுனில் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். அதிக பொருட்செலவில் தயாராகும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சென்னை, நெய்வேலி, ஹைதராபாத், கொச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்று முடிந்தது. ஆக்சன் கலந்த படமாக உருவாகும் இந்த ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் 'முத்துவேல் பாண்டியன்' என்ற கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார்.
இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் ‛காவாலா' எனத்துவங்கும் முதல் பாடல் வெளியானது. இப்பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். ஷில்பா ராவ் பாடியுள்ளார். ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். இந்த பாடலில் தமன்னா, 100க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுடன் கவர்ச்சியுடன் குத்தாட்டம் போட்டுள்ளார். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.