'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜிவி பிரகாஷ்குமார், 2015ல் வெளிவந்த 'டார்லிங்' படம் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமானார். கடந்த எட்டு வருடங்களில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், 'டார்லிங், த்ரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை, பேச்சுலர்' ஆகிய சில படங்கள்தான் அவருக்கு வெற்றியைத் தந்த படங்களாக அமைந்தன. மற்ற படங்கள் அனைத்துமே தோல்விப் படங்கள்தான்.
கடந்த வருடம் வெளிவந்த 'செல்பி, ஐங்கரன்' ஆகிய இரண்டு படங்களுமே ஓடவில்லை. 'ஐங்கரன்' படம் கடந்த வருடம் மே மாதம் வெளிவந்தது. அதற்குப் பிறகு சுமார் 15 மாதங்கள் இடைவெளியில் அவர் கதாநாயகனாக நடித்துள்ள 'அடியே' படம் நாளை மறுதினம் ஆகஸ்ட் 25ம் தேதி வெளியாக உள்ளது.
'ஏண்டா தலையில எண்ண வெக்கல, திட்டம் இரண்டு' ஆகிய படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள படம் இது. '96' படத்தில் நடித்த கவுரி கிஷன் கதாநாயகியாக நடிக்க, வெங்கட் பிரபு முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த வருடம் ஜிவி பிரகாஷ் நடித்து வெளியாகும் முதல் படம் இது. இதற்குப் பிறகு 'இடி முழக்கம், 13, கள்வன்' ஆகிய படங்கள் வெளியாகலாம்.