‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா | ரசிகர்களை சந்தித்த ரஜினி, அட்வைஸ் செய்த கமல், புதுப்புது அறிவிப்புகள், போஸ்டர்கள் : களைகட்டிய 2026 துவக்கம் | 'மார்க்' டப்பிங் படத்துடன் ஆரம்பமான 2026 வெளியீடுகள் | ரஜினி 173... அஸ்வத் மாரிமுத்துவிற்கு அடிக்கிறது அதிர்ஷ்டம் | 2026ல் எதிர்பார்க்கப்படும் படங்கள் : வசூல் சாதனை புரியுமா ? | ரஜினி 173, கமல் 237, அஜித் 64, தனுஷ் 55 : பொங்கலுக்குள் அறிவிப்புகள் வருமா? |

தமிழ் திரையுலகின் நட்சத்திர தொகுப்பாளராக இருப்பவர் ஆர்ஜே.விஜய். திரைப்பட விழாக்கள், நட்சத்திர விழாக்களை தொகுத்து வழங்கி வருகிறார். சின்னத்திரை சேனல்களிலும் தொகுப்பாளராக இருக்கிறார். அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'வேற மாறி ஆபீஸ்' என்ற வெப் தொடர் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தொடர் குறித்த அறிமுக விழாவில் கலந்து கொண்ட ஆர்ஜே.விஜய் பேசியதாவது: இந்த தொடரின் அணியே மிகவும் கற்பனை நயம் வாய்ந்த அணி. படப்பிடிப்பு தளத்தில் என்னோடு நடித்த சக நடிகர்கள் எப்படி நடித்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இங்கு மேடையில் எல்லாரும் சிறப்பாக நடிக்கிறார்கள். என்னை இந்த தொடருக்கு தேர்வு செய்யும் போது நீங்கள் தான் முக்கியமான கதாபாத்திரம், உங்களை வைத்துத் தான் மொத்த கதையும் நகர்கிறது என்று சொன்னார்கள். இப்படித்தான் எல்லோரிடமும் சொல்லியிருக்கிறார்கள் என்பது பின்னர்தான் தெரிந்தது.
இந்த தொடரில் நடித்ததன் மூலம் எனக்கு நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். நானும் ஐ.டி துறையில் சில ஆண்டுகள் வேலை செய்தவன் என்பதால் இந்தக் கதையை என் வாழ்வோடு பொருத்திப் பார்க்க முடிந்தது. இவ்வாறு விஜய் பேசினார். இந்த தொடரில் விஜய்யுடன் விஷ்ணு விஜய், விக்கல்ஸ் விக்ரம், வி.ஜே.பார்வதி, ஷியாமா, லாவண்யா, வி.ஜே.பப்பு, சவுந்தர்யா நஞ்சுண்டன், கண்ணதாசன், சஞ்சீவ் ஆகியோர் நடித்துள்ளனர். சிதம்பரம் மணிவண்ணன் இயக்கி உள்ளார். சிவகாந்த் தயாரித்துள்ளார்.