'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சத்யமூர்த்தி ஜெயகுரு என்பவர் கதையின் நாயகனாக நடித்து, சத்ய சுதா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து, இயக்கியுள்ள படம் 'ஆன்மீக அழைப்பு'. சுபிக்ஷா, ஆதேஷ் பாலா, சிக்கல் ராஜேஷ், கோபிநாத், சதீஷ் வாரியார், புதுமுகம் மீனா ஆகியோர் நடித்துள்ளனர். படம் பற்றி சத்யமூர்த்தி ஜெயகுரு கூறும்போது "மறுஜென்மம் உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில், உண்மை கதையையும் உள்ளடக்கிய திரைக்கதை அமைத்து, விறுவிறுப்பாக உருவாகியுள்ள படம்.
படத்தில் அரசர் காலத்து மோதிரம் ஒன்று, பல மர்ம முடிச்சுகளை அவிழ்கிறது. படம் பார்க்கும் ரசிகர்களிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டு, சரியான விடையளிக்கும் ரசிகர்கள் ஏழு பேருக்கு அரை பவுன் தங்க மோதிரம் பரிசளிக்கப்பட உள்ளது. இம்மாதம் திரைக்கு வர தயாராக உள்ளது" என்கிறார் இயக்குனர் சத்யமூர்த்தி ஜெயகுரு.