மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. | குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்! | போதைப்பொருள் பயன்படுத்த தனி ரூம் வசதி ; பெண் தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு | வார்-2வில் விஜய்யின் ஸ்டைலை காப்பி அடித்த ஹிருத்திக் ரோஷன் | தள்ளிப்போகும் 'தொடரும்' பட ஓடிடி ரிலீஸ் |
பி.வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛சந்திரமுகி'. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி உள்ளது. பி வாசு இயக்க, ராகவா லாரன்ஸ், கங்கனா, வடிவேலு, லட்சுமி மேனன், ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிந்த நிலையில் மற்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.
செப்., 15ல் படம் ரிலீஸாக உள்ள நிலையில் தற்போது வடிவேலு டப்பிங் பணியை துவங்கி உள்ளார். இதுதொடர்பாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் நகைச்சுவையாக பேசி உள்ள வடிவேலு, ‛‛சந்திரமுகி பார்ட் 1,2,3... என 10 வரைக்கும் எடுத்தாலும் சந்திரமுகியின் பெஸ்ட் பிரண்ட் நான் தாண்டா...'' என கூற பின்னணியில் சந்திரமுகி வாய்ஸ் அவரை மிரட்டுகிறது. நகைச்சுவையாக உள்ள இந்த வீடியோ வைரலானது.