மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி | இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களுக்குள் இவ்வளவு ஒற்றுமையா? |
நடிகர் ரஜினிகாந்த் நான்கு ஆண்டுகளுக்கு பின் இந்தாண்டு இமயமலை சென்றுள்ளார். அவர் நடித்துள்ள ‛ஜெயிலர்' படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படம் வெளியீட்டிற்கு முதல்நாள் கிளம்பினார். பெங்களூரில் இருந்து நண்பர்களுடன் இமயமலை பயணத்தை துவக்கிய ரஜினி முதலில் ரிஷிகேஷ் சென்று அங்குள்ள கோயில்களில் வழிபட்டார். தொடர்ந்து தயானந்த சரஸ்வதி சுவாமிகள் ஆசிரமத்திற்கு சென்றார்.
பின்னர் பத்ரிநாத் கோயிலுக்கு சென்று வழிபட்டார். 3000 ஆண்டு பழமையான சுயம்பு மகாவிஷ்ணுவை வழிபட்டார். நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு துவாரஹாத்தில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரமத்தில் சுவாமிகளுடன் இணைந்து தேசிய கொடி ஏந்தி சுதந்திர தினத்தை கொண்டாடினார்.
இதையடுத்து இமயமலையை ஒட்டி உள்ள ஆன்மிக தலங்களுக்கு நடைபயணமாக சென்றார். பின்னர் 2மணிநேரம் மலையேறி பாபாஜி குகைக்கு சென்று அங்கு தியானம் மேற்கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.
இந்த பயணத்தில் ரஜினியின் ரசிகர் ஒருவர் 55 நாட்கள் நடைபயணமாக இமயமலை வந்து அவரை காண வந்துள்ளார். இதையறிந்த ரஜினி, அவரை சந்தித்து பேசி உள்ளார்.