வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் |
அருள் சரவணன் நடித்த லெஜெண்ட் என்ற படம் வெளியாகி ஓரளவு வரவேற்பை பெற்ற நிலையில் அவரது அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியான போதும், அதை அவர் உறுதி செய்யாமல் இருந்தார். இந்த நிலையில் இன்று சுதந்திர தின விழாவை குழந்தைகளுடன் கொண்டாடி நடனமாடிய ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதோடு, இந்த உலகத்திலேயே தாய் - தந்தை மாதிரி குழந்தைகளுக்கு நல்லது செய்பவர்கள் நல்லது நினைப்பவர்கள் யாருமே இல்லை. எனவே பெற்றோர் நமக்கு கடவுள் மாதிரி. அவர்கள் சொல்வதைக் கேட்டு மதித்து வாழ்ந்தால் நாம் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று குழந்தைகளுக்கு ஒரு அறிவுரையை வழங்கி இருக்கிறார் சரவணன். மேலும், தனது அடுத்த படம் குறித்து அவர் கூறிய போது, ஒரு நல்ல கதைக்காக தான் இத்தனை நாளும் காத்துக் கொண்டிருந்தேன். தற்போது நான் எதிர்பார்த்தபடி ஒரு கதை கிடைத்து விட்டது. அதனால் விரைவில் அந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார் லெஜென்ட் சரவணன்.