அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. தற்போது முழுநேர அரசியல்வாதியாக இருப்பவர் ஆந்திர மாநில சுற்றுலா, கலாச்சார விவகாரங்கள், இளைஞர் சேவைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ளார்.
சித்தூர் மாவட்டம் நகரி புறநகர் மண்டலம் டி.ஆர்.கண்ட்ரிகா கிராமத்தில் உள்ள ஸ்ரீ தேசம்மா கோயிலுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆடி மாத விழாவின் ஒரு பகுதியாக, ஞாயிற்றுக்கிழமை ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட பட்டு வஸ்திரங்களை ரோஜா சமர்ப்பித்தார். தொடர்ந்து அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டார். மேலும் கோயிலில் பக்தர்களுக்கு அம்மனின் ஆடி மாதக் கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது.
அம்மனை தரிசனம் செய்த அமைச்சர் ரோஜாவுடன் அவரது சகோதரர்கள் ஒய்.ராம்பிரசாத் ரெட்டி, கோயில் நிர்வாகக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கோயிலில் வேத பண்டிதர்கள் பூர்ணகும்பத்துடன் அமைச்சருக்கு வரவேற்பு அளித்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.