ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
கடந்த சில நாட்களுக்கு முன்பு 'அடியே' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இயக்குனர் மிஷ்கின் பங்கேற்றார். மைக்கை கையில் பிடித்தால் அவன் இவன் என பேசும் மிஷ்கின் இந்த விழாவில் என்ன பேசப்போகிறார் என அனைவரும் ஆவலாக காத்திருந்த போது விஷால் உடன் துப்பறிவாளன் 2 படத்தில் ஏற்பட்ட மோதல் குறித்து பேசினார்.
அதன்படி, "என்னை பற்றி விஷால் பேசும்போதெல்லாம் நான் துரோகத்தை மறக்கவே மாட்டேன் என்கிறார். நான் அப்படி என்ன துரோகம் செய்துவிட்டேன் என தெரியவில்லை. அந்த சமயத்தில் நான் மேடையில் விஷால் குறித்து பொறுக்கி பையன் என பேசிய வார்த்தையை இன்னும் சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி வருகிறார்கள். என் மனதிற்கு நெருக்கமான விஷாலிடம் எனக்கு நல்ல நட்பு இருந்தது. ஆனாலும், ஒரு கட்டத்தில் இருவரும் சண்டை போட்டுக்கொண்டோம். நானும், விஷாலும் இணைந்து பணியாற்றவில்லை என்றாலும், விஷாலின் படங்கள் வெற்றிபெற வேண்டும் என்று தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டு தான் வருகிறேன். இப்படி சொல்வதால் விஷாலுக்கு நான் ஐஸ் வைத்து அவர் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற முயற்சிக்கிறேன் என்று எண்ண வேண்டாம். விஷாலை வைத்து இனிமேல் சத்தியமாக படம் இயக்க மாட்டேன்".
இவ்வாறு கூறினார் மிஷ்கின்.