''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
இந்த வாரம் நடிகை தமன்னாவின் வாரம் என்று சொல்லும் விதமாக ஒரே நேரத்தில் தமிழில் நடிகர் ரஜினிகாந்துடன் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படமும் மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்துள்ள போலா சங்கர் திரைப்படமும் ஆகஸ்ட் 10 மற்றும் 11 என அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸ் ஆக இருக்கின்றன. இரண்டு உச்ச நட்சத்திரங்களுடன் நடித்துள்ளதுடன் அவை அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் சந்தோஷத்தில் இருக்கிறார் நடிகை தமன்னா. இந்த நிலையில் தற்போது கேரளாவில் கொல்லத்தில் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொள்ள வருகை தந்தார் தமன்னா.
காவலா பாடல் மூலம் சமீப நாட்களாக மொழிகளை தாண்டி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் தமன்னா. இதனால் அவரை பார்ப்பதற்காக கடை முன்பாக ரசிகர் கூட்டம் முண்டியடித்தது. திறப்பு விழாவில் கலந்துகொண்டு சிவப்பு கம்பள விரிப்பில் அவர் நடந்து வந்த போது திடீரென இளம் ரசிகர் ஒருவர் தமன்னாவின் முன் வேகமாக வந்து அவரது கையைப் பற்றி குலுக்க முயன்றார்.
அருகில் இருந்த பவுன்சர்கள் சுதாரித்து உடனடியாக அவரை இழுத்து அப்புறப்படுத்த முயன்றனர். இருந்தாலும் தமன்னாவுக்கு கை கொடுத்து ஒரே ஒரு செல்பி எடுத்துக்கொள்ள வேண்டுகோள் வைத்தார் அந்த இளைஞர் தமன்னாவும் இந்த விஷயத்தை சீரியஸாக்காமல் அந்த இளைஞருடன் கைகுலுக்கி அவர் செல்பி எடுக்கும் வரை பொறுமையாக போஸ் கொடுத்தார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.