டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை | ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் |

தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 வருடங்களில் எத்தனையோ கதாநாயகிகள் அறிமுகமாகி பின் வந்த சுவடு தெரியாமல் காணாமல் போய் இருக்கிறார்கள். ஆனால் கிட்டத்தட்ட 18 வருடங்களாக தமிழிலும் மலையாளத்திலும் தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகை ரம்யா நம்பீசன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட தமிழிலும் மலையாளத்திலும் இவரது படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. அதேசமயம் தெலுங்கில் குறைந்த அளவிலேயே படங்களில் நடித்துள்ளார் ரம்யா நம்பீசன்.
கடந்த 2012ல் கடைசியாக தெலுங்கில் நடித்த அவர் கிட்டத்தட்ட 10 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் தெலுங்கில் நடித்துள்ளார். ஆனால் இந்த முறை திரைப்படத்தில் அல்ல, வெப் சீரிஸில்.. தயா என்கிற திரில்லர் வெப் சீரிஸில் கவிதா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரம்யா நம்பீசன். பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் தெலுங்கு திரையுலகில் அடி எடுத்து வைத்திருக்கும் தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார் ரம்யா நம்பீசன். இந்த வெப்சீரிஸ் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.




