குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
ஆடுகளம் படத்தில் அறிமுகமான டாப்ஸி, தொடர்ந்து தமிழில் ஆரம்பம், கேம் ஓவர், அனபெல் சேதுபதி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சிறு இடைவெளிக்கு பின் தற்போது தமிழில் கே 13 என்ற படத்தை இயக்கிய பரத் நீலகண்டன் இயக்கும் ‛ஏலியன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த சில தினங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் கிராபிக்ஸ் காட்சிகள் தான் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவின் ஒரு பகுதியில் வேற்றுக்கிரக மனிதர்களால் ஏற்படும் பிரச்னைகள் குறித்த கதையில் இந்த படம் உருவாகிறது. அதனால் இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக மட்டுமே 10 கோடி ரூபாய் செலவு செய்வதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்தப்படம் குறித்து சமீபத்தில் சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வெளியிட்டிருந்த டாப்ஸி, இப்படம் வேற்று கிரக மனிதர்கள் சம்பந்தப்பட்ட கதை என்றாலும் அதில் நான் வேற்றுக்கிரகவாசியாக நடிக்கவில்லை என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.