திருமணமானவரை டேட்டிங் செய்ய மாட்டேன் : ஜிவி பிரகாஷ் குடும்ப பிரச்னையில் மவுனம் கலைத்த திவ்யபாரதி | ஓடிடி-க்கு தயாரான நானியின் 'கோர்ட்' | இந்திய பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் : பிக்கி தலைவர் கமல் நம்பிக்கை | 2025 தமிழ் சினிமா - காலாண்டு ரிப்போர்ட் | பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.வி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" |
தெலுங்கு பேசும் மக்களின் மாநிலமாக ஒருங்கிணைந்து இருந்த ஆந்திர மாநிலம், தெலங்கானா, ஆந்திரா என இரண்டு மாநிலங்களாக 2014ம் ஆண்டு பிரிக்கப்பட்டது. சினிமா மட்டும் பொதுவாக தெலுங்கு சினிமாவாக இருக்க, அரசியல் தெலங்கானா, ஆந்திரா என பிரிந்துள்ளது.
ஆந்திர மாநில அரசியலில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பவன் கல்யாண் 2014ம் ஆண்டில் ஜனசேனா என்ற கட்சியை ஆரம்பித்தார். 2019ம் ஆண்டு ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் ஜனசேனா கட்சியினர் போட்டியிட்டனர். கஜுவகா, பீமாவரம் என இரண்டு தொகுதிகளில் பவன் கல்யாண் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
2024ம் ஆண்டு ஆந்திர மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதில் தீவிரமாகக் களமிறங்க ஐதராபாத்திலிருந்து விஜயவாடா அருகில் உள்ள மங்களகிரி என்ற இடத்திற்கு பவன் கல்யாண் இடம் பெயர உள்ளாராம். அவரது கட்சியின் தலைமையிடம், பவன் கல்யாணுக்கென தனி வீடு ஆகியவை அங்கு செயல்பட உள்ளதாம். படப்பிடிப்பு இருந்தால் மட்டுமே அவர் ஐதராபாத் செல்வார் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கதை சொல்ல விருப்பப்படும் இயக்குனர்கள் இனி மங்களகிரிக்குத்தான் வர வேண்டுமாம். தெலுங்கு சினிமா ஐதராபாத்தை மையமாகக் கொண்டு மட்டுமே செயல்பட்டு வருகிறது. அதை ஆந்திராவின் முக்கிய நகரான விஜயவாடாவுக்கும் இடம் மாற்ற முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனாலும், அனைத்து தெலுங்கு சினிமா பிரபலங்களும் ஐதராபாத்தில் தான் வசித்து வருகின்றனர். பவன் கல்யாணின் இட மாற்றம் தெலுங்கு சினிமாவிலும் எதிரொலிக்குமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.