லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
சசிகுமார் இயக்கத்தில், சசிகுமார், ஜெய், சுவாதி, சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு மற்றும் பலர் நடித்து 2008ம் ஆண்டு வெளிவந்த படம் 'சுப்பிரமணியபுரம்'. 80களில் நடக்கும் கதையாக வெளிவந்த இந்தப் படத்திற்கு ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்து பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. இப்படத்தை நாளை மறுதினம் ஆகஸ்ட் 4ம் தேதி மீண்டும் வெளியிடுகிறார்கள். அதற்காக படத்தின் புதிய டிரைலரை வெளியிட்டுள்ளார்கள்.
'சுப்பிரமணியபுரம்' என்ற பாடலுடன் நிறைய காட்சித் துண்டுகளுடன் டிரைலர் வெளியாகி உள்ளது. டிரைலரின் வீடியோ தரம் மட்டும் குறையாக உள்ளது. எச்டி-யில் மட்டுமே வெளியிட்டுள்ளார்கள், 4 கே-வில் வெளியிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
இந்த 2023ம் ஆண்டில் “பாபா, வேட்டையாடு விளையாடு, பொன்னியின் செல்வன் 1” ஆகிய படங்கள் ரிரிலீஸ் ஆகியிருந்தன. 'பாபா, வேட்டையாடு விளையாட' படங்கள் குறிப்பிடத்தக்க வசூலையும் பெற்றன. ஆகஸ்ட் 4ம் தேதி சிறிய படங்கள் மட்டுமே வெளியாவதால் 2008ல் சிறிய படமாக வந்து பெரிய வெற்றியைப் பெற்ற 'சுப்பிரமணியபுரம்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
டிரைலர் லிங்க்.... : https://www.youtube.com/watch?v=Ni6bUUeK4q4&feature=youtu.be