பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
ரித்விக் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் " தொடு தூரம் ". முகமரியான் படத்தை இயக்கிய சாய் மோரா இந்த படத்தை இயக்குகிறார். கேரள நாட்டிளம் பெண்களுடனே, சாயம், பட்டதாரி போன்ற படங்களில் நடித்த அபி சரவணன் தனது பெயரை விஜய் விஷ்வா என மாற்றிக் கொண்டு இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார்.
மற்றும் கஞ்சா கருப்பு, மொட்ட ராஜேந்திரன், சாய் தீனா, மைம் கோபி, விஜய் டிவி பாலா, தீனா, ஆரஞ்சு மிட்டாய் பிரபாகர் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஆலியா என்ற குழந்தை நட்சத்திரம் முக்கிய கதாபாதிரத்தில் அறிமுகமாகிறார். ஜெய்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். சி.சத்யா இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் சாய் மோரா கூறியதாவது: இன்றைய கால கட்டத்தில் நடக்கும் பாலியல் குற்றங்களின் பின்னனியில் திரில்லர் படமாக உருவாக்குகிறோம். பெண் குழந்தைகளுக்கு எப்படியான பாதுகாப்பை பெற்றோர்கள் வழங்க வேண்டும் என்பதை நேர்த்தியாக சொல்லும் படம். ஆகஸ்ட் இறுதியில் ஏற்காட்டில் படப்பிடிப்பு முழுவதும் நடைபெற இருக்கிறது என்றார்.