டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என அழைக்கப்படும் ஷங்கர், ஒரு இயக்குனராக 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அவருக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அவர் தற்போது தெலுங்கில் ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' படப்பிடிப்பு கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வருகிறது. 2024ல் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷங்கர் திரையுலகில் 30 ஆண்டுகளைக் கடந்தது குறித்து 'கேம் சேஞ்சர்' படத்தின் நாயகன் ராம் சரண், “இந்தியத் திரையுலகில் நிஜமான கேம் சேஞ்சர். அற்புதமான 30 ஆண்டுகளைக் கடந்ததற்கு வாழ்த்துகள் சார். உங்களுக்காகக் இன்னும் முன்மாதிரியான பணிகளும், பாராட்டுக்களும் காத்திருக்கின்றன,” என்று வாழ்த்தியுள்ளார்.
அதற்கு பதிலளித்த ஷங்கர், “உங்கள் இனிமையான வாழ்த்துகளுக்கு நன்றி ராம். 'கேம் சேஞ்சர்', ஆகஸ்ட் மாதத்தில் நமது அடுத்த கட்ட நகர்வுக்காக காத்திருக்க முடியவில்லை,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கட்டம் என்பது படத்தின் முதல் சிங்கிள் வெளியீடா அல்லது டீசர் வெளியீடா, அல்லது அடுத்த கட்ட படப்பிடிப்பா என தெலுங்கு ரசிகர்கள் ஷங்கரின் அப்டேட்டிற்குக் கொஞ்சம் குழம்பிப் போய் உள்ளனர்.