நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் |
கடந்த ஆண்டு நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில்'எவ்ரிதிங் எவ்ரி வேர் ஆல் அட் ஒன்ஸ்' என்ற படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றவர் மிச்செல்லா யோ. மலேசியாவை சேர்ந்தவர். சீன மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் இவர் டிக்சன் பூன் என்பவரை திருமணம் செய்து கொண்டு கருத்து வேறுபாடு காரணமாக ஒரு சில ஆண்டுகளிலேயே அவரை விவாகரத்து செய்தார்.
அதன்பிறகு ஜேன் டேட் என்பவரை காதலித்தார். திருமணம் செய்து கொள்ளாமல் அவருடன் சேர்ந்து வாழ்ந்தார். இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் 2004ம் ஆண்டு நடந்தது. ஆனாலும் திருமணம் நடக்கவில்லை. தற்போது 19 ஆண்டுகளாக உடன் வாழ்ந்த ஜேன் டேட்டை முறைப்படி திருமணம் செய்துள்ளார் மிச்செல்லா யோ.
சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனிவாவில் நடந்த இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். மிச்செல்லோ யேவுக்கு 60 வயதாகிறது. அவர் மணந்துள்ள ஜேன் டேட்டுக்கு 77 வயதாகிறது.