பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
சிவா இயக்கத்தில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்து 2015ம் ஆண்டில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'வேதாளம்'. அதிரடி ஆக்ஷன், தங்கை சென்டிமென்ட் என அப்படம் அஜித்தின் முந்தைய படங்களின் வசூல் சாதனையை முறியடித்தது.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'போலா சங்கர்' அடுத்த மாதம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாக உள்ளது. மெஹர் ரமேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் சிரஞ்சீவி அண்ணனாகவும், கீர்த்தி சுரேஷ் தங்கையாகவும், தமன்னா காதலியாகவும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டிரைலர் யு டியூபில் வெளியானது. சிரஞ்சீவி ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படமான இப்படத்தின் டிரைலர் முழுக்க முழுக்க ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளது. சிரஞ்சீவியின் அசத்தலான ஸ்டைல், ஆக்ஷ்ன், அதிரடி என அவருடைய ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதத்தில் உள்ளது.
டிரைலரைப் பார்க்கும் போது 'வேதாளம்' படத்தை அப்படியேதான் ரீமேக் செய்துள்ளார்கள் எனத் தெரிகிறது. ஆனால், விஎப்எக்ஸ் காட்சிகள் தரமில்லாமல் மிகவும் மோசமாக உள்ளது. நாளை சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் நடித்துள்ள 'ப்ரோ' படம் வெளியாக உள்ள நிலையில் 'போலா சங்கர்' டிரைலர் சிரஞ்சீவி குடும்பத்து ரசிகர்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரும்.