சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், தமன்னா, மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், சுனில் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஜெயிலர்'. இப்படத்தின் முதல் சிங்கிளான 'காவாலா', இரண்டாவது சிங்கிளான 'ஹூக்கும்' ஆகிய பாடல்கள் ஏற்கெனவே வெளியாகிய நிலையில் நேற்று மூன்றாவது சிங்கிளான 'ஜூஜூபி' பாடல் வெளியானது.
இரண்டாவது பாடலான 'ஹூக்கும்' பாடலில், “தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா”, “உன் அலும்ப பார்த்தவன்”, “இவன் பேர தூக்க நாலு பேரு, பட்டத்த பறிக்க நூறு பேரு,” போன்ற வரிகள் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தின. ரஜினிகாந்தின் 'சூப்பர் ஸ்டார்' பட்டத்திற்கு ஆசைப்படும் நடிகர்களை விமர்சித்து அந்தப் பாடல் எழுதப்பட்டது என விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக விஜய் ரசிகர்கள் கோபமடைய சமூக வலைத்தளங்களில் வார்த்தை மோதல்கள் ஆரம்பமானது.
ரஜினிகாந்தின் வசூல் சாதனைகளை முறியடிக்கும் ஒரே நடிகர் விஜய், விஜய் தான் தமிழ் சினிமாவில் நம்பர் 1 என விஜய்யின் ரசிகர்கள் ஆர்ப்பரிக்க ஆரம்பித்தனர். அடுத்து நேற்று வெளியான மூன்றாவது பாடலான 'ஜூஜூபி' பாடலில் இடம் பெற்றுள்ள “பகையாகிப் போனா பலியாவ வீணா”, “இவன் ரூட்டே வேறு,”, “கரண்ட்டுல கைய வச்சிபுட்ட, அது தொட்ட உடனே தூக்காமதான் விடுமா உன்னைய,”, “புலிக்கே பசிய தூண்டிபுட்டே அது ரத்தக்காவு வாங்காமத்தான் விடுமா உன்னைய,” ஆகிய வரிகள் யாரை “ஜூஜூபி” என நினைத்து எழுதப்பட்டது என்பது இப்போது மீண்டும் சர்ச்சையாகி உள்ளது.
இதனால், நாளை 'ஜெயிலர்' இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் என்ன பேசப் போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.