போலீஸ் அதிகாரியாக நடிக்கும் தர்ஷன் | உபாசனா நடிக்கும் 'எனை சுடும் பனி' | பிளாஷ்பேக் : பிரபு, கார்த்திக் நடிக்க மறுத்த படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : உலக போர், சென்னை மாகாணத்தை கிண்டல் செய்த படம் | ஒரு இடைவெளிக்குத் தயாராகும் தமிழ் சினிமா | 'டிராகன்' படத்தில் ஐந்து இயக்குனர்கள் | அதிக பணம் கொடுத்து தடுமாறும் ஓடிடி நிறுவனங்கள் | சிரஞ்சீவிக்கு 'யுகே' பார்லிமென்ட்டில் பாராட்டு | ஹிந்தி படப்பிடிப்பில் ஹோலி கொண்டாடிய தனுஷ் | 'லியோ' கதைதான் 'குட் பேட் அக்லி' கதையா? |
இந்திய கிரிக்கெட் உலகில் தனக்கென தனி தடம் பதித்தவர் மகேந்திர சிங் தோனி. இந்திய கிரிக்கெட் அணி முதல் டி 20 உலகக் கோப்பையை வெல்லக் காரணமானவர். ஒரு நாள் உலகக் கோப்பைத் தொடரை இரண்டாவது முறையாக வென்று சாதனை படைத்தவர். பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளிலும் அவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து முறை கோப்பையை வெல்லக் காரணமாக இருந்தவர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்று மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்னமும் கிரிக்கெட் உலகில் பிரபலங்களில் முன்னிலையில் உள்ளார்.
கிரிக்கெட் தவிர்த்து கால்பந்து கிளப் அணி, ஹாக்கி கிளப் அணி ஆகியவற்றில் இணை உரிமையாளராக உள்ளார். அடுத்து தோனி என்டர்டெயின்மென்ட் என்ற பொழுதுபோக்கு கம்பெனியை சில வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தார். அவரது முதல் தயாரிப்பாக அவரைப் பற்றிய 'ரோர் ஆப் த லயன்' என்ற வெப் தொடரைத் தயாரித்தார். அடுத்து தமிழில் முழு நீளத் திரைப்படத்தைத் தயாரிக்கும் திட்டத்தில் இறங்கினார். தனது இரண்டாவது வீடு என சென்னையை மனதார நேசிக்கும் தோனி தனதுமுதல் படத் தயாரிப்பு தமிழில்தான் அமைய வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.
அவரது தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் 'எல்ஜிஎம்' படம் இந்த வாரம் ஜுலை 28ம் தேதி வெளியாக உள்ளது. தோனியின் முதல் தயாரிப்பாக வெளிவர உள்ள இந்தப் படத்தின் வெற்றிதான் அவர் அடுத்தடுத்து பல மொழிகளில் படங்களைத் தயாரிக்க உந்துதலாக இருக்கப் போகிறது. தோனியை நேசிக்கும் ரசிகர்கள் அவர் தயாரிக்கும் படத்தையும் நேசிப்பார்களா ?. இன்னும் சில தினங்களில் அதற்கான விடை கிடைத்துவிடும்.