ஜி.வி.பிரகாஷின் 100வது படத்தில் பாடிய யுவன் சங்கர் ராஜா | மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ? | 'கும்கி 2' தாமதம் ஏன்?: பிரபு சாலமன் விளக்கம் | தனுஷ் மருமகன் பவிஷ் நடிக்கும் ‛லவ் ஓ லவ்' | காமராஜாரை இழிவுபடுத்துகிறது: 'தேசிய தலைவர்' படத்திற்கு தடைகேட்டு வழக்கு | உருவக்கேலி வலிகளை ஏற்படுத்தும்: பிரீத்தி அஸ்ரானி | பிளாஷ்பேக்: பிரபுவை இயக்கிய சிவாஜி | பிளாஷ்பேக்: சமூக கதையாக மாற்றப்பட்ட இதிகாச கதை | மந்தாகினியாக பிரியங்கா சோப்ரா : முதல் பார்வை போஸ்டர் வெளியீடு | ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் |

குஷி படத்தை முடித்துவிட்ட நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது பரசுராம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை மிருணாள் தாகூர் நடிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். கோபி சுந்தர் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. இதையடுத்து அமெரிக்காவில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. 2024 பொங்கலுக்கு இப்படம் வெளியாகிறது. இந்த படத்தில் மிருணாள் தாகூர் அல்லாமல் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக இன்னொரு கதாநாயகி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதில் திவ்யன்ஷா கவுசிக் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு மஜிலி, மைக்கேல் போன்ற படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.