சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் |
கடந்த 2016ம் ஆண்டில் அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன் நடித்து வெளிவந்த திரைப்படம் தெறி. இந்த படத்தை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்வதாக கூறப்படுகிறது. அட்லீ மற்றும் பிரபல ஹிந்தி தயாரிப்பாளர் முராத் கெதானி இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். பாலிவுட் நடிகர் வருண் தவான் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை இயக்குனர் காளிஸ் இயக்குகிறார்.
இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஒருவேளை இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்தால் இதுதான் இவரின் முதல் ஹிந்தி படம் ஆகும். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் துவங்கி அடுத்த வருட மே மாதத்தில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது .
முன்னதாக ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிக்கும் ‛மைதான்' படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக இருந்தது. கால்ஷீட் உள்ளிட்ட சில பிரச்னைகளால் அவர் அந்த படத்திலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.