பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
பேட்ட, மாஸ்டர் படங்களுக்கு பின் விக்ரமுடன் ‛தங்கலான்' படத்தில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன். கேஜிஎப் பின்னணியில் உருவாகி உள்ள இந்த படத்தில் வித்தியாசமான வேடத்தில் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிந்தது. சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சியான போட்டோக்களையும், சில கலை நயமான போட்டோஷூட் படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
தற்போது பாரம்பரிய உடையும், அதற்கு ஏற்ற ஆபரணங்கள் அணிந்தும் கலை நயத்தை வெளிப்படுத்தும் விதமாக போட்டோஷூட் எடுத்துள்ளார் மாளவிகா. அந்த போட்டோக்களை பகிர்ந்து, “நம் சமூகத்தில் என்னைத் தாக்குவது என்னவென்றால் கலை என்பது பொருள்களுடன் மட்டுமே தொடர்புடையதாக மாறிவிட்டது. தனிப்பட்ட நபர்களோ அல்லது வாழ்க்கையோ அல்ல. கலை என்பது சிறப்பு வாய்ந்த அல்லது கலைஞர்களான நிபுணர்களால் செய்யப்படும் ஒன்று. ஆனால் எல்லோருடைய வாழ்க்கையும் ஒரு கலைப் படைப்பாக மாறுவதில்லை? கலைப் பொருளாக விளக்கு அல்லது வீடு ஏன் இருக்க வேண்டும். ஏன் நம் வாழ்க்கை அப்படி இருப்பதல்ல?'' என குறிப்பிட்டுள்ளார்.