'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
கடந்த 1972ம் ஆண்டில் இயக்குனர் கே.எஸ்.பிரகாஷ் ராவ் இயக்கத்தில் சிவாஜி கணேசன், வாணி ஸ்ரீ, மேஜர் சுந்தரராஜன், நாகேஷ், மனோரமா உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த திரைப்படம் வசந்த மாளிகை. கே.வி.மகாதேவன் இசையில் கண்ணதாசன் எழுதிய அனைத்து பாடல்களும் ஹிட்டானது. இந்த படம் வெளிவந்த காலகட்டத்தில் தமிழகத்தில் 200 நாட்கள் ஓடியது. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற வெளிநாடுகளில் வசூலை குவித்தது.
ஏற்கனவே இந்த படத்தை டிஜிட்டல் மையமாக்கி இரண்டு முறை தமிழகத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடையே ஆதரவைப் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தை மூன்றாவது முறையாக மீண்டும் டிஜிட்டல் முறையில் தமிழகத்தில் 100 தியேட்டர்களில் வரும் ஜூலை 21ம் தேதி வெளியாகிறது.