மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா |
துணிவு படத்தை அடுத்து விடாமுயற்சி படத்தில் நடிக்கப் போகிறார் அஜித்குமார். மகிழ்திருமேனி இயக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசை அமைக்கிறார். இப்படம் குறித்த அறிவிப்பு மே மாதமே வெளியான போதும், இதுவரை படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 3ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மூன்றே மாதங்களில் விடாமுயற்சி படத்தின் மொத்த படப்பிடிப்பை முடித்துவிட்டு, அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளார்கள். அதனால் ஆகஸ்ட் மாதம் இப்படத்தில் நடிக்கத் தொடங்கும் அஜித், மூன்றே மாதங்களில் நடித்து முடித்துவிட்டு நவம்பர் மாதம் முதல் இரண்டாம் கட்ட உலக பைக் சுற்றுலாவை தொடங்குவதற்கும் திட்டமிட்டுள்ளாராம்.