தி கேர்ள் பிரண்ட் படப்பிடிப்பில் இணைந்த ராஷ்மிகா | பைட்டர் படத்திலிருந்து ஹிர்த்திக் போஸ்டர் வெளியானது | ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் இதோ | ஹாய் நான்னா படக்குழு புதிய முயற்சி | அமீர்கான், விஷ்ணு விஷாலுக்கு உதவிய அஜித் | அம்மா ஸ்ரீதேவியின் 10 வருட பழைய ஆடையில் மகள் குஷி | நிவின்பாலி - பிரணவை ஒன்றிணைத்த வினீத் சீனிவாசன் | நடிப்பு சொல்லிக் கொடுத்த குருவின் பிறந்தநாளில் பிரபாஸ் அளித்த பரிசு | நடிகை லேனாவுக்கு ஆதரவாக கல்லூரி மாணவிகள் மத்தியில் குரல் கொடுத்த சுரேஷ்கோபி | பெங்களூருக்கு வந்த நானியை வரவேற்று உபசரித்த சிவராஜ்குமார் |
ரஜினிகாந்த் தற்போது ‛ஜெயிலர்' மற்றும் லால் சலாம் ஆகிய இரண்டு படங்களிலும் நடித்து முடித்து விட்டார். இதில் ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதை அடுத்து ஜெய்பீம் ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். சமீபகாலமாக இந்திய சினிமாவைச் சார்ந்த நடிகர்- நடிகைகள் மாலத்தீவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அங்கு தாங்கள் கடற்கரையில் ஜாலியாக சுற்றி திரிவது, கடல் நீரில் குளிப்பது போன்ற புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். இப்படியான நிலையில், தற்போது நடிகர் ரஜினியும் மாலத்தீவு சென்றுள்ளார். அவர் சென்ற இந்த தகவலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தங்களது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அதோடு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.