ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
இரா.கோ.யோகேந்திரன் இயக்கியிருக்கும் படம் 'மறக்குமா நெஞ்சம்'. ரக்ஷன் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் மலினா, தீனா மற்றும் பிராங்ஸ்டர் ராகுல் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு - கோபி துரைசாமி, இசை - சச்சின் வாரியர். இப்படத்தை ஜனார்தன் சவுத்ரி, ரமேஷ் பஞ்சக்னுலா, ரகு எல்லுரு மற்றும் இரா.கோ.யோகேந்திரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. படத்தின் கதை பள்ளிக்கால நண்பர்களுடனான ரீயூனியனை மையமாக கொண்டது என்பதால் இசை வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்திருக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பள்ளித் தோழர்கள் கலந்து கொண்டனர்.
படத்தின் இயக்குனர், நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பள்ளி ஆசிரியர்களை மேடையில் ஏற்றி, முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சிறப்பு விருது வழங்கி சிறப்பித்தனர். விருதை பெற்றுக் கொண்ட ஆசிரியர்கள், மேடையிலேயே கண்கலங்கி, ஆனந்த கண்ணீர் சிந்தி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த சம்பவம் விழாவில் கலந்து கொண்டவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பாடல்களை பள்ளி ஆசிரியர்கள் வெளியிட, அதனை திரைப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களின் பள்ளி கால நண்பர்கள் பெற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து ஆசிரியர்கள், தங்களது மாணவர்கள் பள்ளி நாட்களில் செய்த குறும்பு செயல்களை பகிர்ந்து, பள்ளி காலத்தில் கண்டிப்புடன் நடந்து கொண்ட பிறகும், நீண்ட காலம் கழித்து தங்களை அழைத்து விருது வழங்கி சிறப்பித்தது பற்றி தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.