ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பிரான்ஸில் வாகன சோதனையின் போது சிறுவன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இதை தொடர்ந்து அங்கு கலவரம் நடந்தது. இதுவரை 350 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கலவரக்காரர்கள் வாகனங்களுக்கு தீவைத்தல், கடைகளை சூறையாடுதல் போன்றவற்றில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா பாரிஸ் சென்றுள்ளார். அவர் இந்த கலவரத்தில் மாட்டிக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து ஊர்வசி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாரிசில் நடந்து வரும் கலவரமும், வன்முறை சம்பவங்களும் கவலை அளிக்கிறது. பயமாகவும் இருந்தது. என்னுடன் வந்த குழுவினரின் பாதுகாப்பு நிலையை நினைத்து வருந்துகிறேன். இந்தியாவில் இருக்கும் எங்கள் குடும்பத்தினரும் எங்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்பட்டனர். நாங்கள் பாதுகாப்பாக இருக்க முடிந்தவரை முயற்சி செய்கிறோம். பாரிஸ் அழகான நாடு. இங்கு இப்படி வன்முறை சம்பவங்கள் நடப்பது கவலை அளிக்கிறது. இருப்பினும் தற்போது கலவரம் கட்டுக்குள் வந்துள்ளது'' என்று எழுதியிருக்கிறார்.