போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

பிரபல வீஜேவான ரம்யா ஒருகாலத்தில் விஜய் டிவியில் கொடிக்கட்டி பறந்தார். தற்போது நடிப்பின் மீது அதிக கவனம் செலுத்தி வரும் அவர், பிட்னஸ், டான்ஸ் போன்றவற்றில் பிசியாக இருக்கிறார். இன்ஸ்டாகிராமிலும் அவ்வப்போது பியூட்டி, பிட்னஸ் டிப்ஸ்களுடன் டான்ஸ் ரீல்களையும் வெளியிட்டு வந்தார்.
அண்மையில் வெளியான லியோவின் நா ரெடி பாடலுக்கு பரதநாட்டியம் ஆடி ரீல்ஸ் வெளியிட்டுள்ள அவர், அந்த பதிவில் 'க்ளாசி-பை' குத்து என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். அதாவது நாங்கள் குத்துபாடலுக்கு இப்படி தான் ஆடுவோம் என்று பொருள் தொனிக்கும் வகையில் அப்படி கேப்ஷன் போட்டுள்ளார். இதை பார்த்த சிலர் ரம்யா சாதி பாகுபாடுடன் பேசுகிறார். பரதநாட்டியம் என்றால் ஹை க்ளாஸ், குத்து டான்ஸ் என்றால் லோ க்ளாஸா? என கமெண்டில் கொந்தளித்து வருகின்றனர்.
ஆனால், ரம்யா ஒரு பரதநாட்டிய மாணவியாக தான் இந்த பதிவை வெளியிட்டுள்ளாரே தவிர குத்து டான்ஸை குறைத்து மதிப்பிட்டோ, சாதிய பாகுபாட்டுடனோ எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என ரம்யாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக சண்டை போட்டு வருகின்றனர்.