தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி |

சின்னத்திரை சீரியல் நடிகை சங்கீதா. பிரபல யு-டியூபர் மற்றும் பைக்கரான டிடிஎப் வாசனின் வீடியோக்களை பலமுறை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார். சங்கீதா தொடர்ந்து டிடிஎப் வாசனின் வீடியோக்களை பதிவிடுவதை வைத்து இருவரும் காதலிக்கின்றனரா? என ரசிகர்கள் கேட்டு வந்தனர்.
இந்நிலையில், சங்கீதா தனது திருமண அழைப்பிதழில் மணமகனின் பெயரில் 'வி' என்ற எழுத்திற்கு பிறகு இருக்கும் எழுத்துகளை மறைத்து சோஷியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார். ஏற்கனவே, சங்கீதாவின் சகோதரரும், டிடிஎப் வாசனும் நெருங்கிய நண்பர்கள் என்பதாலும், டிடிஎப் வாசனின் பதிவுகளை தொடர்ந்து சங்கீதா பதிவிட்டு வந்ததாலும் டிடிஎப் வாசனுக்கும் சங்கீதாவுக்கும் தான் திருமணம் என செய்திகள் பரவ ஆரம்பித்தன.
இதனால், வருத்தமடைந்த சங்கீதா தனது திருமண அழைப்பிதழை முழுமையாக வெளியிட்டு 'நண்பர்களே வதந்திகளை பரப்பாதீர்கள். இதுதான் உண்மையான திருமண அழைப்பிதழ். டிடிஎப் வாசன் எனக்கு தம்பி போன்றவர்' என்று பதிவிட்டுள்ளார்.
சங்கீதா உண்மையில் விக்னேஷ் என்பவரை தான் திருமணம் செய்ய உள்ளார். இவர்களது திருமணம் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது.