இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
இந்தியாவே கொண்டாடும் ஒரு கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி. சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றுவிட்டாலும் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணிக்காக பல ஆண்டுகளாக விளையாடி வருகிறார். சென்னை ரசிகர்களால் ‛தல' என கொண்டாடப்படும் இவர் தற்போது தோனி என்டர்டெயின்ட்மென்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கி முதல் படமாக தமிழில் ‛எல்ஜிஎம்' (லெட்ஸ் கெட் மேரீட்) என்ற படத்தை தனது மனைவி சாக்ஷி பெயரில் தயாரித்துள்ளார்.
ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகிபாபு ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். ரமேஷ் தமிழ்மணி இயக்கி உள்ளார். காதல் பின்னணியில் தாய் பாசத்தையும் கலந்து இந்தபடம் தயாராகி உள்ளது. படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று(ஜூலை 10) இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் தோனி, சாக்ஷி உள்ளிட்டவர்களுடன் படக்குழுவினரும் பங்கேற்றனர். எல்ஜிஎம் இசை தட்டை தோனி வெளியிட்டார். முன்னதாக இந்த விழாவிற்காக சென்னை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
விழாவில் பேசிய யோகிபாபு : ‛‛தோனி தமிழ் படம் பண்ணியது பெரிய விஷயம். 7 நாட்கள் இயக்குனர் கால்ஷீட் கேட்டார். எனக்கு அவர் மேல் நம்பிக்கை இல்லை. புத்தகம் ஒன்றை காட்டியபோது தான் அவரை நம்பினேன். இருந்தாலும் கால்ஷீட் பிரச்னை இருந்தது. தோனியிடமிருந்து பேட் வாங்கி தரேன் என்று சொன்னார். உடனே சரி என டேட் கொடுத்தேன். நதியா மிகவும் யதார்த்தமான நபர். ஹரிஷ், இவானா உடன் நடித்தது சிறந்த அனுபவம். இவானாவை நிறைய கலாய்பேன். ஆனால் அந்த பொண்ணு ஒன்னுமே பேசாது. தோனியின் ஹெலிகாப்டர் ஷார்ட் போல வேகமாக படத்தை முடித்தார் இயக்குனர். அடுத்த கால்ஷீட்டில் அவருக்கு நான் பரிசு கொடுப்பேன்'' என்றார்.
நடிகை இவானா கூறுகையில், ‛‛தோனி தமிழ் படம் பண்ணியதால் எங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. அதிகமான பயத்தில் இருக்கேன். தோனி மிகவும் எளிமையான மனிதர். அவர் பேச முயன்றாலும் என்னால் பேச முடியவில்லை. அவ்வளோ பயமாக உள்ளது. அவர் படத்தில் நடித்தது எனது அதிர்ஷ்டம். சாக்ஷி இனிமையான பெண். இன்ஸ்டாவில் அவர் என்னை பின் தொடருவது இன்ப அதிர்ச்சியாக இருந்தது'' என்றார்.