விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' |
ஜுலை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான கடந்த வாரம் ஜுலை 7ம் தேதி 6 நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகின. அந்தப் படங்கள் அனைத்துமே ரசிகர்களின் வரவேற்பைப் பெறவில்லை. அனைத்துமே சிறிய படங்களாக இருந்தாலும் 'பம்பர்' படத்திற்கு மட்டும் விமர்சகர்களின் பாராட்டுக்கள் இருந்தது. ஆனாலும், அந்தப் படத்திற்கு எதிர்பார்த்த அளவில் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வரவில்லை.
இந்த வாரம் ஜுலை 14ம் தேதி வெறும் 3 படங்கள் மட்டுமே வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'மண்டேலா' படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற இயக்குனரான மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி, யோகிபாபு, மிஷ்கின் மற்றும் பலர் நடித்துள்ள 'மாவீரன்', ராஜ்மோகன் ஆறுமுகம் இயக்கத்தில் ஆர்ஜே விக்னேஷ்காந்த், அம்மு அபிராமி, அப்துல் அயாஸ், அபிராமி மற்றும் பலர் நடித்துள்ள 'பாபா பிளாக் ஷீப்', நித்யானந்தம் இயக்கத்தில் ஆதித், வினிதா, அரவிந்த்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ள 'நேற்று நான் இன்று நீ' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.
இவற்றில் 'மாவீரன்' படம் தமிழகம் முழுவதும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது. சிவகார்த்திகேயன் நடித்து இதற்கு முன்பு வெளியான 'ப்ரின்ஸ்' படம் தோல்வியடைந்த நிலையில் இந்தப் படம் தனக்கு மீண்டும் ஒரு பெரிய வெற்றியைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் சிவகார்த்திகேயன்.