ஏவிஎம் சரவணன் படத்தயாரிப்பை நிறுத்தியது ஏன்? | கை கட்டியபடி பேசுவார், வெள்ளை உடைகளை விரும்பி அணிவார்: பணிவுக்கும் உபசரிப்புக்கும் புகழ் பெற்ற ஏவி.எம்.சரவணன் | பிரபலங்கள் பட்டியல் 2025: தமிழ் நடிகர்கள், நடிகைகளுக்கு இடமில்லை… | சாய் பல்லவியால் மறுவாழ்வு பெற்றேன் ; இசையமைப்பாளர் நெகிழ்ச்சி | திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார் | சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி |

மாஸ்டர் படத்திற்கு பின் நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் கூட்டணி அமைத்த படம் ‛லியோ'. சஞ்சய் தத், அர்ஜூன், திரிஷா, பிரியா ஆனந்த், கவுதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான் உள்ளிட்ட ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அக் 19ல் படம் ரிலீஸ் என ஏற்கனவே அறிவித்துவிட்டனர்.
லோகேஷின் வழக்கமான போதை பொருள் கதைகளத்தில் இந்த படம் உருவாகிறது என கூறப்படுகிறது. அதோடு லோகேஷின் எல்சியு-விலும் இந்த படம் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு முதல் பாடலாக ‛நா ரெடி' என்ற பாடலை வெளியிட்டனர். சர்ச்சைகளை கடந்து 55 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை இந்த பாடல் பெற்றது.
சென்னை, காஷ்மீர், ஐதராபாத் உள்ளிட்ட பல ஊர்களில் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்நிலையில் லியோ படத்தில் தனக்கான படப்பிடிப்பு காட்சியை நிறைவு செய்துள்ளார் நடிகர் விஜய். இதுதொடர்பாக விஜய் உடன் மோதுவது மாதிரியான போட்டோவை பகிர்ந்து, ‛‛லியோ படத்தில் விஜய் தனது பகுதி படப்பிடிப்பை முடித்துவிட்டார். இரண்டாவது முறையாக இந்த பயணத்தை சிறப்பாக மாற்றியதற்கு நன்றி அண்ணா'' என பதிவிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.