''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
நடிகர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படம் கடந்த 2014ல் வெளியானது. இதில், தனுஷ் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. அந்த காட்சிகளின்போது, திரையில் இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகம் உரிய முறையில் இடம்பெறவில்லை எனக்கூறி, சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் விளம்பரப்படுத்தல் தடை மற்றும் முறைப்படுத்தல் சட்ட விதிகளை மீறி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் தனுஷ், இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாடுக்கான மக்கள் அமைப்பின் சார்பில் 2014ம் ஆண்டு ஜூலை மாதம் தமிழக அரசிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதில் விசாரணை மேற்கொண்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷ்க்கு எதிராக புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு விசாரணை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கிடையே இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, நடிகர் தனுஷ், இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், இன்று (ஜூலை 10) தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.