காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
அமெரிக்காவில் 'ஒசேஜ்நேஷன்' என்ற பழங்குடியினர் வசித்து வந்தார்கள். 1920ம் ஆண்டு அவர்கள் வாழ்ந்த பகுதியில் அதிகமான எண்ணெய் வளம் இருப்பதை கண்டுபிடித்த அமெரிக்கர்கள் அவர்களை அந்த பகுதியில் இருந்து விரட்டிவிட்டு எண்ணெய் வளத்தை கைப்பற்ற திட்டமிட்டார்கள். தங்கள் விவசாய நிலம் பறிபோவதை எதிர்த்து அந்த மக்கள் போராடினார்கள். அவர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்தார்கள்.
இந்த சம்பவத்தை மையமாக வைத்து 2017ம் ஆண்டு டேவிட் கிரென் 'கில்லர்ஸ் ஆப் தி பிளவர் மூன்' என்ற நாவலை எழுதினார். தற்போது இந்த நாவல் அதே பெயரில் திரைப்படமாகிறது. இதனை மார்ட்டின்ஸ் கார்செஸி இயக்கி உள்ளார். பழங்குடியின மக்களுக்காக போராடும் அமெரிக்கராக டைட்டானிக் ஹீரோ லியானார் டிகாப்ரியோ நடித்துள்ளார். அவரது காதலியாக அதே பழங்குடியினத்தை சேர்ந்த லில்லி கிளாஸ்டோ நடித்துள்ளார். ராபர்ட் நீரோ முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளிவருகிறது. தற்போது இதன் டீசர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.