'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் | திரவுபதி 2: ரிச்சர்ட்சின் 'வீர சிம்ஹா கடவராயன்' தோற்றம் வெளியீடு | இளம் வயது தோற்றத்தில் கிஷோர் |
தமிழ், தெலுங்கில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. தமிழ், தெலுங்கைத் தவிர ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகியவற்றில் தலா ஒரு படத்தில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் 2018 ஆண்டு வெளிவந்த 'ஹே ஜுட்' என்ற படத்தில் நிவின் பாலி ஜோடியாக நடித்தார்.
ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மலையாளத்தில் நடிக்க உள்ளார். மலையாளத்தில் இந்தாண்டு வெளிவந்து பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்ற '2018' படத்தில் கதாநாயகன் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் 'ஐடின்டிட்டி' என்ற படத்தில் த்ரிஷா நடிப்பதாக இன்று(ஜூலை 8) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். அகில் பால் - அனஸ்கான் இணைந்து இயக்க உள்ள படம் இது.
இப்படத்தில் நடிக்க உள்ள த்ரிஷாவை வரவேற்று டொவினோ தாமஸ், “த்ரிஷாவுடன் ஒரு அற்புதமான படத்தில் நடிக்க கை கோர்ப்பது உற்சாகமானது. மறக்க முடியாத பயணத்திற்குத் தயாராகுங்கள். மிகவும் உற்சாகமான படப்பிடிப்பிற்காகக் காத்திருக்கிறேன். நிறைய ஆக்ஷன் காட்சிகள் உள்ளன,” என்று குறிப்பிட்டுள்ளார்.
“அதிகமான ஆக்ஷன் காட்சிகள் கொண்ட இந்தப் படத்தில் இக்குழுவுடன் இணைவது உற்சாகமாக உள்ளது,” என்று த்ரிஷா தெரிவித்துள்ளார்.