இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் கடந்த 1998ல் ஹிந்தியில் வெளியான படம் சத்யா. அதுவரை வில்லன் நடிகராக நடித்து வந்த ஜே.டி சக்கரவர்த்தி இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தியன் படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ரங்கீலா புகழ் ஊர்மிளா தான் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஒரு பக்காவான கேங்ஸ்டர் படமாக இது வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியும் பெற்றது. சொல்லப்போனால் ராம் கோபால் வர்மாவின் படங்களுக்கு என ஒரு தனி ரசிகர் வட்டத்தை பாலிவுட்டில் இந்த படம் ஏற்படுத்தியது.
இந்த படம் வெளியாகி நேற்றுடன் 25 வருடங்களை தொட்டுள்ளது. இந்த படம் குறித்து தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார் படத்தின் நாயகி ஊர்மிளா. அதேசமயம் இந்த படம் வெளியாகி 25 வருடங்களாகியும் அவர் இன்னும் ஒரு மனக்குறையுடன் தான் இருக்கிறார் என்பதையும் வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த படம் வெளியான சமயத்தில் தான் மிகவும் கிளாமரான கதாபாத்திரங்களில் நடித்து பிசியாக இருந்து வந்ததாகவும் அந்த சமயத்தில் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து பக்கத்து வீட்டுப் பெண் போன்ற கதாபாத்திரத்தில் கிளாமர் இல்லாமல் இந்தப்படத்தில் நடித்திருந்தேன். ஆனால் இதற்காக எனக்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை. அது மட்டுமல்ல எந்த ஒரு விருதுக்கும் நான் நாமினேட் கூட செய்யப்படவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் ஊர்மிளா.