கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் | 'கைதி 2' எப்போது ஆரம்பமாகும் ? | நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி |

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் மாமன்னன். இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெற்று வரும் நிலையில், படக்குழு கேக் வெட்டி வெற்றியை கொண்டாடி உள்ளது. மேலும் இப்படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு ஒரு மினி கூப்பர் காரை பரிசாக வழங்கினார்.
இந்த நிலையில் மாமன்னன் படத்தில் இடம்பெற்றுள்ள நெஞ்சமே நெஞ்சமே என்ற பாடல் குறித்து இயக்குனர் செல்வராகவன்ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், தமிழில் இப்படி ஒரு பாடல் கேட்டு எவ்வளவு நாள் ஆயிற்று. தலைவா, நாடி நரம்புக்குள் புகுந்து மயக்கம் அதிசயம் இது என்று பதிவிட்டு அதை ஏ. ஆர். ரஹ்மானுக்கும் டேக் செய்துள்ளார். இந்தப் பாடலை விஜய் யேசுதாஸ் பின்னணி பாட, யுகபாரதி எழுதியுள்ளார் . அதேபோல் இந்த படத்தில் வடிவேலு பாடிய ராசா கண்ணு என்ற பாடலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.