லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. அதனால் இப்படத்துக்கு இணையாக அஜித்தின் 62 வது படமும் உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா படமும், விஜய்யின் லியோ படத்திற்கு இணையான பிரமாண்டமாக உருவாகி வருகிறது. லியோ படத்தின் ஒரு பாடலில் நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களுடன் விஜய் ஆடி இருப்பது போன்று கங்குவா படத்திலும் சூர்யா இடம்பெறும் பாடல் காட்சியிலும் நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களை நடிக்க வைத்துள்ளார் சிவா. ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் அமைத்த பிரேம் ரக்ஷித்தை இந்த பாடலுக்கு நடன அமைப்பாளராக்கி இருப்பதாகவும் அப்பட வட்டாரங்களில் கூறுகிறார்கள்.