அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு |
தமிழ் சினிமாவில் முக்கியமான தடத்தைப் பதித்த 'சுப்பிரமணியபுரம்' படம் வெளிவந்து இன்றுடன்(ஜூலை 4) 15 ஆண்டுகள் நிறைவடைகிறது. சசிகுமார் இயக்கம் நடிப்பில், அவருடன் சுவாதி, ஜெய், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்து 2008ம் ஆண்டு ஜுலை 4ம் தேதி வெளிவந்த படம். 80களில் நடப்பதாகக் கதை கொண்ட இந்தப் படம் அந்த நாட்களை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது. படத்தில் நடித்த அனைவருமே பாராட்டுக்களைப் பெற்றனர். நட்பின் நம்பிக்கைத் துரோகத்தை ரத்தமும், சதையுமாய் காட்டிய படம்.
இன்று படத்தின் 15வது வருட நிறைவை முன்னிட்டு சசிகுமார், சமுத்திரக்கனி, ஜெய் உள்ளிட்ட பலரும் அவர்களது நினைவுகளையும், மகிழ்ச்சிகளையும் பகிர்ந்துள்ளனர்.
“நேற்று போல் இருக்கிறது, 'சுப்பிரமணியபுரம்' 15 ஆண்டுகள்… நினைவுகள் இன்னும் புதிதாக உள்ளது. இப்படத்தை நீங்கள் அங்கீகரிக்க மட்டும் செய்யவில்லை, கொண்டாடினீர்கள். இந்த குறிப்பிடத்தக்க நாளில், உங்களிடம் ஒரு செய்தியைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். எனது இயக்கத்தில் அடுத்த படத்தை ஆரம்பிக்கிறேன்,” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
2008ல் வெளிவந்த 'சுப்பிரமணியபுரம்' படத்திற்குப் பிறகு 2010ல் 'ஈசன்' என்ற படத்தை இயக்கினார் சசிகுமார். ஆனால், அந்தப் படம் வெற்றி பெறவில்லை. அதற்குப் பிறகு கடந்த 13 வருடங்களாக நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது இயக்கம் பற்றி தெரிவித்துள்ளார்.