குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
சமீபத்தில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு நடந்தது. இதில் படப்பிடிப்புக்கு சரியான ஒத்துழைப்பு தராத 5 நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. ஆனால் அந்த 5 நடிகர்கள் யார் என்பதை தெரிவிக்கவில்லை. சில தினங்களுக்கு முன்பு இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணை தலைவர் பூச்சி முருகன், பொதுக்குழு உறுப்பினர் கோவை சரளா ஆகியோர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் தலைவர் முரளி ராமசாமி, செயலாளர் கதிரேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் 15 நடிகர்கள் மீது தயாரிப்பாளர் சங்கம் குற்றச்சாட்டு வைத்தது. அதாவது படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை, சம்பளத்தை திடீரென உயர்த்தி கேட்கிறார்கள். பாதுகாவலர்கள், உதவியாளர்கள் என ஏகப்பட்டபேரை அழைத்து வந்து அவர்களுக்கும் பேட்டா கொடுக்கச் சொல்லி வற்புறுத்துகிறார்கள் என்பது மாதிரியான குற்றச்சாட்டுகளை தயரிப்பாளர் சங்கம் முன் வைத்தது.
நடிகர் சங்த்தின் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்து வருமாறு : தயாரிப்பாளர் குறிப்பிட்ட தேதியில் படப்பிடிப்பு நடத்தாமல் தாமதம் செய்கிறார்கள். நடிகர்கள் அந்த தேதியில் எந்த பணியும் இல்லாமல் இருக்க வேண்டியது இருக்கிறது. இன்னொரு படத்தில் நடித்துக் கொண்டு இருக்கும்போது தங்கள் படத்துக்கு வரவேண்டும் என்று அழைக்கிறார்கள். சம்பள விஷயத்தை பொருத்தவரை பேசிய சம்பளத்தையே நடிகர்கள் வாங்குகிறார்கள்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் மோதிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துது. இதுகுறித்து தயாரிப்பளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையே நீண்டகாலமாக நல்லுறவு நிலவி வருகிறது. நடிகர்கள் நலனை, உரிமைகளை பாதுகாப்பது போலவே தயாரிப்பாளர்கள் நலனை கருத்தில் கொண்டே தென்னிந்திய நடிகர் சங்கம் செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக இரு சங்கங்கள் இடையே மோதல் என்ற ரீதியில் தகவல் பரப்பப்படுகின்றன.
தமிழ் திரைத்துறையின் முக்கிய சங்கங்களான தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கங்களுக்குள் இடையே எந்த மோதலும் இல்லை. நடிகர்களின் கால்ஷீட், புதிய ஒப்பந்தங்கள் குறித்து தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து சில புகார்கள் வந்தன. அதேபோல் நடிகர்கள் தரப்பிலும் சில பிரச்னைகளை கூறியுள்ளனர். இவை வழக்கமாக இரு தரப்பிலும் எழக் கூடிய, பேசினால் தீர்ந்து விடக் கூடிய பிரச்னைகள் தான். ஆனால் ஒரு தரப்பு வாதங்களை மட்டுமே மையமாக வைத்து தவறான தகவகல் பரவுவது வருத்தம் அளிக்கிறது. இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை மிக சுமூகமாக நடைபெற்று வருகிறது. அனைத்து பிரச்னைகளும் விரைவில் களையப்படும். இதைவிடுத்து இரு சங்கங்களிடையேயான நல்லுறவை சீர்குலைக்கும் விதத்தில் வீண் வதந்திகளை பரப்புவோருக்கு எங்கள் கண்டனத்தை பதிவு செய்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.