இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

கடந்த 2008ம் ஆண்டில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அப்பா, மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வெளிவந்த திரைப்படம் வாரணம் ஆயிரம். அதேசமயம் தெலுங்கில் ‛சூர்யா சன் ஆப் கிருஷ்ணன்' என்ற பெயரில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்த இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.
ஏற்கனவே இந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் ஜூலை 19ம் தேதி அன்று வெளிநாடுகளிலும் இந்தியாவில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் ஜூலை 21ம் தேதி அன்று தெலுங்கு பதிப்பில் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர். ஆனால், தமிழ் பதிப்பில் தமிழகத்தில் வெளியாகுமா என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.