தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

தமிழில் ரஜினி உடன் ‛ஜெயிலர்' படத்தில் நடித்துள்ளார் தமன்னா. இதுதவிர தெலுங்கு, ஹிந்தியிலும் நடிக்கிறார். சமீபத்தில் வெளியான ‛ஜிகர்தா' என்ற வெப்தொடரில் படு கவர்ச்சியாக நடித்ததோடு, முத்தக்காட்சி மற்றும் படுக்கை அறை காட்சிகளிலும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அடுத்தப்படியாக வெளியாகி உள்ள லஸ்ட் ஸ்டோரிஸ் 2 வெப்தொடரிலும் இதுமாதிரி நடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டில், முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு இப்போது படுக்கையறை காட்சி வரை எல்லை மீறி நடிப்பதின் காரணம் என்ன? என்று சோசியல் மீடியாவில் தமன்னாவிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், இது 2023ம் ஆண்டு. இப்போது கூட பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என மற்றவர்கள் சொல்வது ஏன்? என்னைப் பற்றி கிண்டல் செய்பவர்களை நான் கண்டு கொள்வதில்லை. அதேசமயம் எனது 18 வருட சினிமா வாழ்க்கையில் முத்த காட்சி, படுக்கை அறை காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கண்டிஷன் போட்டிருந்தது உண்மைதான். ஆனால் தற்போது அடுத்த கட்டத்துக்கு வளர வேண்டும் என்று விரும்புகிறேன். அதன் காரணமாகவே ஏற்கனவே நான் போட்டிருந்த விதிகளை மீற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் தமன்னா.




