எமர்ஜென்சி படத்திற்கு பஞ்சாபில் தடை : கங்கனா கோபம் | 'விடாமுயற்சி' ரீமேக் உரிமை சிக்கலுக்குத் தீர்வு | ஷங்கருக்கு ஆதரவாகப் பேசினாரா தமன்? | ரசிகர்கள் கல் எறிய மாட்டார்கள் என நம்புகிறேன் : விஷால் | விரைவில் திரைக்கு வரும் தினேஷின் கருப்பு பல்சர் | விஜயகாந்த் படத்தின் தலைப்பில் நடிக்கிறாரா தனுஷ்? | சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு | ரஜினியின் ஜெயிலர் 2 அறிமுக டீசரின் மேக்கிங் வீடியோ வெளியானது | இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார் | விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' |
நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், திஷா பதானி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் 'புராஜக்ட் கே' படத்தில் கமல்ஹாசன் நடிப்பதன் அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே அப்படத்தில் கமல் வில்லனாக நடிக்கிறார், வெறும் 25 நாட்கள்தான் நடிக்கப் போகிறார், அதற்கே அவருக்கு சம்பளம் 100 கோடி, 150 கோடி என சமூக வலைத்தளங்களில் ஏதேதோ சொன்னார்கள். கமல் இணைந்ததால் படத்தின் பட்ஜெட் கூட அதிகமாகி 600 கோடியைக் கடந்துவிட்டது என்றெல்லாம் தகவலைப் பரப்பினார்கள்.
கமல் ரசிகர்கள் ஒரு படி மேலே போய் 'புராஜக்ட் கே' என்பதே கமல்ஹாசன் என்ற பெயரின் ஆங்கில முதல் எழுத்தான 'கே' என்பதைத்தான் குறிக்கிறது என பதிவிட ஆரம்பித்தார்கள். ரஜினிக்குக் கூட இப்படி ஒரு சம்பளம் கிடையாது. 'லால் சலாம்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதற்கும் அவருக்கு சில பல கோடிகள்தான் சம்பளம். ஆனால், கமல் 150 கோடி வாங்குகிறார் என்றெல்லாம் பெருமை பேசினார்கள்.
இந்தத் தகவல், செய்திகள் டோலிவுட்டினரை எரிச்சலடைய வைத்துள்ளது. இல்லையில்லை, கமல்ஹாசனுக்கு வெறும் 25 கோடிதான் சம்பளம், 100 கோடியோ, 150 கோடியே கிடையாது. பிரபாஸுக்கு மட்டும்தான் 150 கோடி சம்பளம் என்று தகவலைப் பரப்பி வருகிறார்கள். அமிதாப்புக்கே 10 கோடிதான் தருகிறார்கள், கமல்ஹாசன் அந்த சம்பளத்திற்கு நடிக்க மறுத்ததால் 25 கோடி வரை பேசி சம்மதிக்க வைத்தார்கள் என்றும் சொல்கிறார்கள்.